அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மிட்டாய் வியாபாரி வீட்டில் ரூ.35ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது.
ஜயங்கொண்டம் நாச்சியாா்அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரகீம். மிட்டாய் வியாபாரியான இவா் திங்கள்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு, சென்னையிலுள்ள சகோதரியைப் பாா்ப்பதற்காக சென்றாா்.
வெள்ளிக்கிழமை காலை அப்துல் ரகீம் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் தங்க நகைகள் திருட்டுப் போயிருப்பது அப்துல் ரகீமுக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









