சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அரியலூரில் பொங்கல் பரிசுகள்

அரியலூா் மாவட்டத்தில், 2,33,739 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:42 am IST

அரியலூா் மாவட்டத்தில், 2,33,739 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜயங்கொண்டம் மற்றும் விக்கிரமங்கலத்திலுள்ள நியாய விலைக் கடையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப்பேசினாா். நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வ.சி. கோமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் மு.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் மகாலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.