டி.என்.ஏ. மரபணு தகவல்களை ஜாதகம் மூலம் அறிய இயலுமா?

டி.என்.ஏ. மரபணு தகவல்களை ஜாதகம் மூலம் எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்..
DNA
DNA
Published on
Updated on
3 min read

டி.என்.ஏ. எனும் மரபணு தகவல்களை ஜாதகம் மூலம் அறிய இயலுமா? என்றால் நிச்சயம் அறியலாம்.

டி.என்.ஏ. என்றால் என்ன?

டி.என்.ஏ. உயிரினங்களில் மரபணு தகவல்களை சேமிக்கும் ஒரு கரிம சேர்மம். டி.என்.ஏ. என்பது மூலக்கூறுகளின் ஒரு குழுவாகும், இது பரம்பரை பொருள்கள் அல்லது மரபணு வழிமுறைகளைப் பெற்றோரிடமிருந்து சந்ததிகளுக்கு மாற்றுவதற்கும் பொறுப்பாகும். டி.என்.ஏ. அமைப்பு நம் உடலின் அடிப்படை மரபணு அமைப்பை வரையறுக்கிறது. சொல்லப்போனால், பூமியில் ஏறக்குறைய எல்லா உயிரினங்களின் மரபணு அமைப்பை அது வரையறுக்கிறது.

டி.என்.ஏ. - டிஆக்ஸிரைபோநியூக்ளியர் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான மூலக்கூறு கட்டமைப்பைக் கொண்ட ஒரு கரிம கலவை. உயிரினங்களில் மரபணு தகவல்களைச் சேமிப்பதற்கு டி.என்.ஏ பொறுப்பை ஏற்கிறது. மரபணு ரீதியாகப் பார்த்தால், உங்கள் தந்தையிடமிருந்து அனுப்பப்பட்ட அதிக டி.என்.ஏ.வைப் பயன்படுத்துகிறீர்கள். பெண்கள் தங்கள் டிஎன்ஏவில் 50% ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் பெறுகிறார்கள், ஆண்கள் தங்கள் தாயிடமிருந்து சுமார் 51%, தந்தையிடமிருந்து 49% மட்டுமே பெறுகிறார்கள். இது உங்கள் உயிரணுக்களுக்குள் வாழும் சிறிய உறுப்புகளான மைட்டோகாண்ட்ரியா காரணமாகும், இது உங்கள் தாயிடமிருந்து மட்டுமே நீங்கள் பெறுவீர்கள். மைட்டோகாண்ட்ரியா என்பது செல்லின் ஆற்றல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். அவை இல்லாமல், ஒரு செல்லால் உணவிலிருந்து ஆற்றலை உருவாக்க முடியாது.

ஜோதிட ரீதியாக டி.என்.ஏ. எவ்வளவு எளிய முறையில் காணப் போகிறோம் என்பதனை இங்கு காண்போம்..

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான மரபணு இணைப்பு..

பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ஜாதகத்தில் டி.என்.ஏ. சோதனை ஜோதிட ரீதியாக செய்யப்படுகிறது. குழந்தையின் செவ்வாய், சந்திரன் பெற்றோரின் ஜாதகத்தில் 5வது வீடு / அதிபதியுடன் அல்லது 9 வது வீடு / அதிபதியுடன் தொடர்பை / உறவை ஏற்படுத்த வேண்டும். அது கிரகப் பெயர்ச்சியால் வரும் அமைப்பிலோ அல்லது தசா புத்தியால் வரும் அமைப்பிலோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதை மதிப்பீடு செய்வதற்கு அதிகபட்சம் பிரச்னையை இறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரண ஜாதகம்..

கீழே உள்ள ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் மீனத்திலும், செவ்வாய் கடகத்திலும் உள்ளது. இந்த சந்திரன், செவ்வாய் எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். இதனை இவரின் தந்தை ஜாதகத்தோடு ஒப்பீடு செய்து பார்க்கலாம். இந்த குழந்தையின் சந்திரன், செவ்வாய் இவரின் தந்தையின் ஜாதகத்தில் 5ஆம் வீட்டிலோ அதன் அதிபதியாலோ மற்றும் 9ஆம் வீட்டிலோ அல்லது அதன் அதிபதியாலோ ஒத்துப்போதல் வேண்டும். அதுதான் குழந்தை, தந்தை டிஎன்ஏ சரியாவதற்குச் சமம்.

தற்போது, இவரின் தந்தையின் ஜாதகத்தை காணும் போது, அதில் 5ஆம் அதிபதி சந்திரனாகவும் மற்றும் 9ஆம் அதிபதி செவ்வாயாகவும் வருவதை காணுவதால், தந்தை, மகன் உறவில் டி.என்.ஏ. நூற்றுக்கு நூறு சரியாக உள்ளதை காணமுடிகிறது.

மேற்படி ஜாதகங்களில் மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைவரின் ஜாதகமும் வராது. வரவேண்டும் என எந்த நிர்பந்தமும் கிடையாது. ஆனால், 5ஆம் அதிபதி / 9ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்ற சந்திரன் அல்லது செவ்வாய்; சந்திரன், செவ்வாய் பெற்ற சாரம் 5ஆம் அதிபதி / 9ஆம் அதிபதியின் சாரமாகவோ தந்தையின் ஜாதகத்தில் இருக்க வாய்ப்பு. இதுபோல் ஏதேனும் ஒரு தொடர்பு குழந்தையின் ஜாதகத்தில் உள்ள சந்திரன், செவ்வாய் தந்தையின் ஜாதகத்தில் 5 மற்றும் 9ஆம் அதிபதி அல்லது இடத்துடன் தொடர்பு பெற்றிருப்பதால் டி.என்.ஏ. தொடர்பு பெற்றிருப்பதை உணரலாம்.

மேற்படி குழந்தை தந்தையின் 9ஆம் அதிபதியான செவ்வாய் தசை, புதன் புத்தி, 5ஆம் அதிபதியான சந்திரன் அந்தரத்தில் பிறந்தது என்பதை அறியும்போது ஜோதிடம் எவ்வளவு சிறப்பானது, மனித சமுதாயத்திற்கு சால சிறந்தது என்பதைக் கொண்டாட வேண்டியுள்ளது. குழந்தையின் சந்திரன் மற்றும் செவ்வாய், தந்தையின் ஜாதகத்தில் மேற்படி கிரகங்களின் தசா, புத்தி இந்த 5 மற்றும் 9ஆம் அதிபதி அல்லது அங்குள்ள கிரகங்களின் தசை புத்தி காலத்தில் தான் சரியாகப் பிறக்கின்றன. இதுவே அவர்கள் இருவரின் உறவை உறுதிப்படுத்துவதாய் மற்றும் மரபணு இணைப்பாய் அமைவதைக் காணலாம்.

மேற்கூறிய உதாரண ஜாதகத்தில், குழந்தையின் தந்தையின் ஜாதகத்தில் கோச்சார செவ்வாய் கடகத்தில், அவரின் மீன லக்கனத்திற்கு 5ஆம் இடத்தில் - 1992 நவம்பரில் பிறந்தது என்பதை இங்குக் குறிப்பிடவேண்டி உள்ளது.

எவ்வளவு துல்லியமாக உள்ளதை இங்குக் கூறமுடிகிறது. அதுதான் ஜோதிடம் மூலம் காணும் மரபணு இணைப்பு (டிஎன்ஏ). இதனை நம்மோடு சமகாலத்தில் வாழ்ந்த, இந்தியாவின் தலை சிறந்த 5 ஜோதிட மேதைகளுள் ஒருவரான கே.என். ராவ் அவர்களின் "PLANETS AND CHILDREN": எனும் நூலில் ஜோதிட துறை சார்ந்த பல விளக்கங்களைக் கண்டு ஜோதிட உலகமே அதிசயிக்கும்.

ஜோதிடம் கற்பவர்களுக்கும், எங்கேயாவது தந்தை - குழந்தை உறவுமுறை பிரச்னை வருமாயின் இதனைக்கொண்டு உண்மைத் தன்மையை அறிய முடியும். ஆனால் முக்கியமானது இரண்டு கருத்துகளை மறக்கக்கூடாது.

1. குழந்தை, தந்தையின் பிறப்பு குறிப்பு சரியானதாக இருத்தல் அவசியம்.

2. மேற்படி சோதனையைச் செய்பவரான ஜோதிடரின் கணிப்பு மற்றும் ஆய்வுக்கு நேரமும், அவகாசமும், நிதானமும் தேவை. ஜோதிடம் பராசரர் போன்ற தேவ ரிஷிகளால், முனிவர்களால் அதன்பிறகு வந்த மகாகவி காளிதாசர், கலியுகத்தில் பிறந்த பிவி ராமன், கே.என். ராவ் போன்ற பல ஜோதிட மேதைகளால் மானிட சமுதாயத்திற்குச் சொல்லப்பட்ட அருமையான கருத்துக்களாகும்.

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com