எண் ஜோதிடம்
ஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால், அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்டி ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக, 18-ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் (8+1+9+4+6) 28 வரும். அத்துடன், தேதி 18-யும் கூட்டினால், (28+18) 46 வரும். ஆக, கூட்டு எண் 1.
இந்த மாத பலன்கள்
ஜனவரி மாத எண்கணித பலன்கள் - 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரிய தாமதம் ஏற்படக்கூடும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும்.
பரிகாரம்: புதன்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
எண் ஜோதிடம்:
பிறந்த தேதி பலன்கள்
-
1
பிறந்த தேதி
1, 10, 19, 28
என்றால்...
-
2
பிறந்த தேதி
2, 11, 20, 29
என்றால்...
-
3
பிறந்த தேதி
3, 12, 21, 30
என்றால்...
-
4
பிறந்த தேதி
4, 13, 22, 31
என்றால்...
-
5
பிறந்த தேதி
5, 14, 23
என்றால்...
-
6
பிறந்த தேதி
6, 15, 24
என்றால்...
-
7
பிறந்த தேதி
7, 16, 25
என்றால்...
-
8
பிறந்த தேதி
8, 17, 26
என்றால்...
-
9
பிறந்த தேதி
9, 18, 27
என்றால்...