தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 37% அதிகரிப்பு

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:02 pm IST

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 167.4 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் காணப்பட்ட தேவையான 122.1 டன்னுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை ரூ.33,090 கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.43,600 கோடியாக இருந்தது.
இருப்பினும், ஐந்தாண்டு கால சராசரியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் தங்கத்துக்கான தேவை குறைந்தே காணப்பட்டது. ஜிஎஸ்டி எதிரொலியாக இரண்டாம் காலாண்டு இறுதியில் தங்க விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. ஒரு சதவீத உற்பத்தி வரியை எதிர்த்து நகை வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஆபரண விற்பனை பாதிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 650-750 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் ஆபரணங்களுக்கான தேவை 89.8 டன்னிலிருந்து 41 சதவீதம் அதிகரித்து 126.7 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை ரூ.24,350 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.33,000 கோடியாக காணப்பட்டது.
முதலீட்டு நோக்கிலான தங்கத்துக்கான தேவை 26 சதவீதம் உயர்ந்து 40.7 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.8,740 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.10,610 கோடியானது.
உலக அளவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 10 சதவீதம் சரிந்து 953 டன்னாக இருந்தது. தங்கத்தின் அடிப்படையிலான கடன் பத்திரங்களான ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு குறைந்து போனதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.