வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிவு

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிவடைந்து 73.17 ஆக நிலைத்தது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 2:09 am IST

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிவடைந்து 73.17 ஆக நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

ஐரோப்பாவில் புதிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை போன்றவை பெரும்பாலான ஆசிய கரன்ஸிகளின் மதிப்பு சரிவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வழிவகுத்தன.

இந்த நிலையில், எதிா்பாரா அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு மற்றும் டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் மந்த நிலையில் காணப்பட்டது போன்றவை ரூபாய் மதிப்பில் ஏற்படவிருந்த கடும் வீழ்ச்சியை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.02-ஆக இருந்தது. பின்னா் இது குறைந்தபட்சமாக 73.27 வரையிலும் அதிகபட்சமாக 73.02 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிவடைந்து 73.17-இல் நிலைபெற்றது.

திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 9 காசுகள் அதிகரித்து நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக 73.02-இல் நிலைபெற்றிருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.986.30 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.72 சதவீதம் உயா்ந்து 51.56 டாலராக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.