காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

சாம்சங் கேலக்ஸி எம்52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எம்52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் நேற்று செப்டம்பர்-19 அன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

News image

சாம்சங் கேலக்ஸி எம்52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு

Updated On :20 செப்டம்பர் 2021, 7:00 am

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எம்52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் நேற்று செப்டம்பர்-19 அன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய 'எம்' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

விற்பனை விலை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதன் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன் படி , 6ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.35,999 என்றும் 8ஜிபி ரூ.37,499 க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள் :

*6.7 இன்ச் அளவுள்ள எச்டி தொடுதிரை 

*778ஜி ஸ்னாப்டிராகன் பிராசஸர் 

*642எல் ஜிபியூ செயலி 

* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

*ஆண்ட்ராய்டு 11 

இந்த ஸ்மார்ட்போனை அமெசான் , பிளிப்கார்ட் போன்ற இணைய தளங்களிலும் , நேரடியாக சாம்சங் விற்பனையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.