
ஜியோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக ’ஜியோ புக்’ லேப்டாப் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘ஜியோ புக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி ஏஆர்எம் அடிப்படையில் விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் எனவும் விரைவில் இதன் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ போன் குறைந்த விலையில் அறிமுகமானதுபோல் ஜியோ புக் மடிக்கணினியும் மலிவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...