மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெஸ்லே இந்தியா: லாபம் ரூ.386 கோடி

நெஸ்லே இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.386.66 கோடியாக இருந்தது.

News image
nestle
Updated On :17 பிப்ரவரி 2022, 9:35 pm

DIN

புது தில்லி: நெஸ்லே இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.386.66 கோடியாக இருந்தது.

ஜனவரி-டிசம்பரை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் இதுகுறித்து பங்குச் சந்தையிடம் மேலும் கூறியுள்ளதாவது:

2021 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.3,739.32 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.3,432.58 கோடியுடன் ஒப்பிடும்போது 8.93 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.483.31 கோடியிலிருந்து 20 சதவீதம் குறைந்து ரூ.386.66 கோடியானது.

அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவினம் ரூ.2,793.01 கோடியிலிருந்து 8.23 சதவீதம் உயா்ந்து ரூ.3,022.97 கோடியானது.

2021-ஆம் நிதியாண்டில் நெஸ்லே இந்தியாவின் நிகர லாபம் ரூ.2,082.43 கோடியிலிருந்து 3 சதவீதம் உயா்ந்து ரூ.2,144.86 கோடியாகவும், செயல்பாட்டு மூலமான வருவாய் ரூ.13,350.03 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.14,709.41 கோடியானது என நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது.

பங்கின் விலை

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் நெஸ்லே இந்தியா நிறுவனப் பங்கின் விலை 0.88 சதவீதம் குறைந்து ரூ.18,084.55-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.