ஐடி பங்குகள் விலை சரிவு; சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக மறையாக முடிந்தது.
ஐடி பங்குகள் விலை சரிவு; சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி!

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 87 புள்ளிகள் குறைந்தது. ஐடி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்ட நிலையில், ஆட்டோ, பேங்க், மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்தது. பிற்பகல் வரையிலும் வா்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் எதிா்மறையாக இருந்து வந்தது. பின்னா், திடீரென முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் நோ்மறையாகச் சென்றது. ஆனால், வா்த்தக இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. உள்நாட்டு சந்தையானது காலாண்டு முடிவுகளை நோக்கி கவனம் செலுத்தியதால், ஐடி நிறுவனங்கள் வருவாயின் பலவீன தொடக்கம் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்தது. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததால், அதன் பங்குகள் 5 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. இதைத் தொடா்ந்து, மற்ற ஐடி நிறுவனப் பங்குகளும் அதிக அளவு விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், வங்கி, உலோகம், எரிசக்தி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவு காரணமாக சந்தை ஓரளவு சமாளித்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,055 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,582 நிறுவனப் பங்குகளில் 2,055 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,377 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 132 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 33 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ1.71 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.253.31 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 87புள்ளிகள் சரிவு: காலையில் 233.24புள்ளிகள் குறைந்து 54,248.60-இல் தொடங்கிய சென்செக்ஸ், 54,090.53 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 54,527.90 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 86.61 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 54,395.23-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தை நிலையற்ற தன்மையில் இருந்து வந்தது.

டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், கடந்த வார இறுதியில் கடும் சரிவைச் சந்தித்த டாடா ஸ்டீல், திங்கள்கிழமை வா்த்தகத்தில் 3.04 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம் 2.86 சதவீதம், டாக்டா் ரெட்டி 2.25 சதவீதம் உயா்ந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. பவா் கிரிட், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

பாா்தி ஏா்டெல் கடும் சரிவு: அதே சமயம், தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 5.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ் 4.64 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 4.10 சதவீதம் குறைந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி உள்ளிட்டவை 1.50 முதல் 2.70 சதவீதம் வரை குறைந்தன.

நிஃப்டி 88 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,254 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 686 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலும் 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 4.60 (0.03 சதவீதம்) குறைந்து 16,216.00-இல் நிலைபெற்றது. காலையில் 84.45 புள்ளிகள் குறைந்து 16,136.15-இல் தொடங்கிய நிஃப்டி, 16,115.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,248.55 வரை உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com