இந்திய தேயிலை ஏற்றுமதி 5% சரிவு

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை 4.93 சதவீதம் சரிந்துள்ளது.
tea
tea


கொல்கத்தா: கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை 4.93 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 15.79 கோடி கிலோவாக உள்ளது.

இது, 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களோடு ஒப்பிடுகையில் 4.93 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி 16.61 கோடி கிலோவாக இருந்தது.

வட இந்தியாவில், பெரும்பாலும் அஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து தேயிலை ஏற்றுமதி மதிப்பீட்டு மாதங்களில் 6.61 சதவீதம் குறைந்து 9.63 கோடி கிலோவாக உள்ளது. இது 2022 ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10.31 கோடி கிலோவாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் தென் இந்தியாவிலிருந்து தேயிலை ஏற்றுமதி ஏற்றுமதி 2.19 சதவீதம் குறைந்து 6.16 கோடி கிலோவாக உள்ளது.

2022-ஆம் ஆண்டு முழுமைக்கும் இந்தியாவில் இருந்து 23.1 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மொத்த தேயிலை ஏற்றுமதி சந்தையில் ஈரான் சுமாா் 20 சதவீதம் பங்கு வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிஐஎஸ் கூட்டமைப்பு நாடுகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com