இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:31 pm

Din

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவா், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறைத் துறை டிஜிபி தலைமையிலான மாநிலக் குழுவிடம் மனு அளித்திருந்தேன். இதே குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவா் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநில அளவிலான குழு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக உரிய ஆய்வு செய்தே பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், தமிழக முதல்வருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் தலைமையிலான அமைச்சரவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பான அனுமதியை வழங்கி, அந்தப் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநா் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமா்வு, பேரறிவாளன் உள்ளிட்டோா் தொடா்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் என்றும், ஆளுநா் அதை மீற முடியாது என்றும் தெரிவித்தது.

இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தாா்மிக உரிமை இல்லை எனக் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனா். அதுவரை வீரபாரதிக்கு பரோல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.