ஜீவா அறிமுகமான "ஆசை ஆசையாய்' படத்தை இயக்கிய ரவி மரியா, அதையடுத்து பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு "மிளகா' என்ற படத்தை இயக்குகிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரும் "நாளை', "சக்கரவியூகம்' படங்களில் நடித்தவருமான நட்ராஜ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். "மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் நடித்த பூங்கொடி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் சிங்கம்புலி, ஜெகன்னாத், நந்தா பெரியசாமி, ஜி.எம்.குமார் ஆகியோரும் இளவரசு, "நான் கடவுள்' தாண்டவன், "வெயில்' வெங்கடேசன், "அஞ்சாதே' ஸ்ரீதர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகன் பாலாஜி வி.ரங்கா இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ""மிளகாய் எப்படி காரசாரமாக இருக்குமோ அதுபோல இந்தப் படத்தின் கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரைப் பின்னணியில், சினிமாத்தனம் இல்லாமல் இயல்பான கதையம்சத்துடன் சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து படம் உருவாகிறது. படத்தில் முழுக்க முழுக்க மதுரை வட்டார வழக்கு பயன்படுத்தப்படுகிறது'' என்கிறார் இயக்குநர்.
இசை -சபேஷ்-முரளி. படத்தொகுப்பு -ஜெய்சங்கர். தயாரிப்பு -ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.