வருகிறது வலிமை அப்டேட்?
அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் முதல்பார்வை (பர்ஸ்ட்லுக்) போஸ்டர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் முதல்பார்வை (பர்ஸ்ட்லுக்) போஸ்டர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா.
இந்நிலையில் படம் குறித்த எந்தவித தகவல்களும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு இணையத்தில் எழுதி வந்தனர்.
வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் விளம்பரப் பணிகள் அஜித்தின் 50-வது பிறந்த நாளையொட்டி மே 1 முதல் தொடங்கும் என்றும் போனி கபூர் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிவித்திருந்தார்.
எனினும் மே 1-ம் தேதி வலிமை அப்டேட் வெளிவராது என அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். கடந்த வருடமும் இதே காரணத்துக்காக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறாக கடந்த இரண்டு வருடங்களாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் முதல்பார்வை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...