/

நாயகனாகும் விஷ்ணு விஷால் தம்பி!

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக அறிமுகமாகிறார்.

News image
தன் தம்பி ருத்ராவுடன் நடிகர் விஷ்ணு விஷால்!
Updated On :12 பிப்ரவரி 2024, 4:46 am

DIN

நடிகர் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி 16 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளார். சில தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கதாநாயகனாகவே இருக்கிறார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான, ‘கட்டா குஸ்தி’, ‘லால் சலாம்’ ஆகியவை வசூல் ரீதியான வெற்றியை அடைந்தது.

Story image

இந்நிலையில், தன் தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.