
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல்கள் வெளியாகின.
81 வயதான முன்னணி திரை நடிகர் அமிதாப் பச்சன், மும்பை அந்தேரியில் பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது கால் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அமிதாப் பச்சன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “எப்போதும் நன்றியுடன்” எனப் பதிவிட்டு தான் நலமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் விரைவில் மீண்டுவர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.