எங்க படத் தலைப்பு 'அது' கிடையாது; மறுத்த விஜய்-அட்லீ படக்குழு!
நேற்று சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட படி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு...


சென்னை: நேற்று சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட படி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு 'மூன்று முகம்' அல்ல என்று அந்த படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
'தெறி' படத்திற்குப் பிறகு மீண்டும் அட்லீயுடன் விஜய் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று நாயகிகள். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
நேற்று இந்த படத்தின் தலைப்பு 'மூன்று முகம்' என்று அறிவித்து 'டிசைன் போஸ்டர்' ஒன்று சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பரபரப்பாக பகிரப்பட்டது.
இந்த தலைப்பு விவகாரம் குறித்து தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலில், 'படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நேற்று இணையத்தில் வெளியானது ரசிகர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்; அதற்கும் படக்குழுவினருக்கும் சம்பந்தமில்லை" என்று விளக்கமளித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...