கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா!

தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும்தான் 2017-ம் வருடம் பாலிவுட்டில்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2017, 12:55 pm

IANS

தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும்தான் 2017-ம் ஆண்டு பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்த இரண்டு நடிகைகள் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

Story image

ஒரு படத்தில் நடிக்க தீபிகாவின் 11 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெறுகிறார் என்றும் அவரது காதலர் ரன்வீர் சிங் 10 பில்லியன் டாலர்கள் பெறுகிறார் என்கிறது ஃபோர்ப்ஸ். தீபிகாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர்கள் இருவரும் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

Story image

SRK, கிங் கான், பாலிவுட் பாட்ஷா என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக் கானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 38 பில்லியன் டாலர்கள்! அவர் தான் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட டாப் 10 சம்பள வரிசைப் பட்டியலில் முதலிடம் வகிப்பவர். அவரைத் தொடர்ந்து சல்மான் கான் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருடைய சம்பளமானது 37 பில்லியன் டாலர்களாம்.

Story image

கான்களைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருப்பவர் அக்‌ஷய். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பதில் இவரும் முக்கியமானவர். சமீபத்தில் அக்‌ஷய் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘டாய்லெட் - ஏக் ப்ரேம் கதா’ இதற்குச் சான்று. 

Story image

அமீர் கான் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஹ்ருதிக் ரோஷன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தவர்கள் தான் தீபிகா, பிரியங்கா மற்றும் ரன்வீர் சிங்.

Story image

மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் தற்போதைய சம்பளம் 9 மில்லியன் டாலர்கள். இவர் ஒன்பதாம் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பத்தாம் இடத்தைப் பிடித்தவர் ரன்பீர் கபூர்.

மேற்கூறிய பட்டியல் அந்தந்த நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களைப் பொருத்து அமைந்துள்ளது என்றும் இவர்கள் நடித்த படங்கள் சக்கைப் போடு போட்டு ஜூன் 1 2016 லிருந்து ஜுன் 1, 2017 வரை மொத்தமாக 183 மில்லியன்கள் டாலர்களைக் குவித்துள்ளது என்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.