இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

“நீங்களே உண்மையான ரப் நீ பணா டி ஜோடி” என்று வாழ்த்திய ஷாருக் கான்! அப்படி என்றால் என்ன தெரியுமா?

ஷிரேயா கோஷலின் குரலில் இசைத்த பாடலான “துஜே மேன் ரப் திக்‌ஷிதா, யாரா மே கியா கரோ” பாடல் இந்தியா முழுவதிலும் அதிலும் குறிப்பாக பல தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு பாடல்.

News image
Updated On :12 டிசம்பர் 2017, 7:23 am

DIN

நேற்று இத்தாலியில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களை வாழ்த்திப் பதிவு செய்துள்ள டிவிட் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

அனுஷ்கா நாயகியாக இந்தி திரையுலகிற்கு அறிமுகமான படம் ‘ரப் நீ பணா டி ஜோடி’. இந்தப் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக அவர் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் அனுஷ்கா தன்னை விட வயதில் மிகவும் மூத்தவரான ஷாருக் கானை சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்வார். இருவரும் நண்பர்களைப் போல் ஒரே வீட்டில் வசித்து வர, தனக்கு அனுஷ்கா மீதுள்ள அளவுக்கதிகமான காதலை எப்படி அவரிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஷாருக் கான் தடுமாற, அனுஷ்கா நடனம் பயிலும் அதே வகுப்பில் வேடம் அணிந்து ஷாருக் கான் சேர்வார். அங்கு அனுஷ்காவின் மிக நெருங்கிய நண்பனாக மாறி அவரை தான் காதலிப்பதாகக் கூறுவார். இவர்கள் இருவரும் ஒருவரே என்று அறியாத அனுஷ்கா யாரைத் தேர்வு செய்வது என்று புரியாமல் தவிக்கக் கடைசியில் தன்னுடைய கணவன் ஷாருக் கானையே தேர்வு செய்வார். 

‘ரப் நீ பணா டி ஜோடி’ என்பதற்கு ‘கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட ஜோடி’ அல்லது ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்ட ஜோடி’ என்பது அர்த்தம். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் சரியாக 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தப் படத்தில் ஷிரேயா கோஷலின் குரலில் இசைத்த பாடலான “துஜே மேன் ரப் திக்‌ஷிதா, யாரா மே கியா கரோ” பாடல் இந்தியா முழுவதிலும் அதிலும் குறிப்பாக பல தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு பாடல்.

இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இனைந்து நடித்த ஷாருக் கான் விராட் மற்றும் அனுஷ்காவின் திருமண புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி “நீங்கள் இருவரும் உண்மையான ரப் நீ பணா டி ஜோடி. நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்” என்று பதிவு செய்து தன்னுடை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.