இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமணம் முடிந்தது; கோலி & அனுஷ்கா சர்மாவின் அடுத்தத் திட்டங்கள்!

கோலி - அனுஷ்கா தம்பதியரின் திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

News image
Updated On :12 டிசம்பர் 2017, 12:28 pm

எழில்

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 

இதையடுத்து கோலி - அனுஷ்கா தம்பதியரின் திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டிசம்பர் 21 அன்று தில்லியில் உறவினர்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது. டிசம்பர் 26 அன்று மும்பையில் திரைத்துறையினர் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது.

மும்பை வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்வார்கள். அங்கு டெஸ்ட் தொடருக்காக கோலி தயாராவார். புத்தாண்டை கோலியுடன் அங்குக் கொண்டாடவுள்ள அனுஷ்கா சர்மா, ஜனவரி முதல் வாரம் இந்தியாவுக்குத் திரும்புவார். மும்பையில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கும் ஆனந்த் எல் ராய் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். பிப்ரவரியில் வருண் தவனுடனான படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார். பிப்ரவரி 9 அன்று வெளியாகவுள்ள Pari படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அனுஷ்கா கலந்துகொள்வார். 

விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்று 2 மாதம் அங்கேயே இருப்பார். 

திருமணத்துக்குப் பிறகு தில்லியிலிருந்து திரும்பியவுடன் இருவரும் மும்பை வோர்லிக்கு இடம்பெயர்ந்து புதிய வீட்டில் வசிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.