'விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் எப்படிப்பட்ட வில்லன்? 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால்,
'விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் எப்படிப்பட்ட வில்லன்? 
Published on
Updated on
2 min read

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பல்கேரியாவில் நடந்தது அனைவரும் அறிந்ததே.  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் அளித்துள்ள பேட்டியில், 'நான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நான் ஹீரோவா அல்லது வில்லனா, என்னவிதமான ரோல் எனக்கு என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது ஸ்பை த்ரில்லர் ஜானர் (Genre) படமாக அமைந்துள்ளது. இதில் எனக்கு பவர்ஃபுல்லான ஒரு பாரலல் (Parallel) ரோல். அஜித்தை பார்த்து எப்போதும் நான் வியந்து கொண்டிருப்பேன். அவர் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். வேதாளம் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை மிகவும் ரசித்தேன்.

இயக்குனர் சிவா இந்தப் படத்தில் நடிக்கும்படி என்னிடம் கதை சொல்லும் போது என்னுடைய பெயரை உள்ளடக்கியே (விவேகம் - விவேக்) இப்படத்தின் டைட்டிலை தான் உருவாக்கியதாகச் சொன்னார். நான் தான் இந்த ரோலை செய்ய முடியும் என்று பிடிவாதமாக என்னை இதில் நடிக்க வைத்துள்ளார், எனக்கு மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். இதுவரை இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தேன், இப்போது தமிழ் படத்தில் நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் அஜித் குமாருடன் நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

நமக்குக் கிடைத்த தகவலின் படி விவேக் வழக்கமான வில்லனாக இல்லாமல் வித்யாசமான ஒரு வில்லனாக  விவேகம் படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. விவேகம் பற்றிய ஒவ்வொரு செய்தியும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பாடல் டீசரும் ரசிகர்களை உற்சாகக் கடலில் வீழ்த்துகிறது. படத்தின் டீஸர் ஒரே நாளில் 5 மில்லியன் பார்வையாளர்களை அடைந்தது. படக் கதை, மற்றும் கேரக்டர்களை மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளர் படக்குழுவினர். மிகவும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

அஜித் இந்தப் படத்துக்காக தன்னுடைய லுக்ஸ் பற்றி கூடுதல் கவனத்துடன் இருந்துள்ளார். FBI ஆபிஸர் ரோலில் அவர் கச்சிதமாக்க பொருந்தியுள்ளார். ஐரோப்பா முழுதும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டான ரூ.120 கோடியில் தயாராகி வருகிறது. காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கும் இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். அனைவரும் எதிர்ப்பார்க்கும் விவேகம் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com