ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாளை வெளியாக உள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் சுவாரசியங்கள்!

இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் அது பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2017, 10:12 am

DIN

சென்னை: இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் அது பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

பிரபலஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி-2’ படமானது பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் டிரைலர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அவை பின்வருமாறு:

‘பாகுபலி-2’ டிரைலரின் மொத்த நீளம் 2 நிமிடம் 20 வினாடிகள்.

டிரைலர் ஆக்ஷன் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

முக்கியமான சில கிராபிக்ஸ் காட்சிகளும் டிரைலரில் தலை காட்டுகின்றன.

டிரைலர்  தணிக்கை குழுவினரின் 'யுஏ' சான்றிதழ் பெற்றுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு திரையரங்குகளில் முதலில் டிரைலர் வெளியிடப்படும்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 250 முதல் 300 திரையரங்குகளில் டிரைலர் ஒளிபரப்பாகவுள்ளது. 

நாளை மாலை 5 மணிக்கு இணையதளங்களில் டிரைலர் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.