பாகுபலியைத் தொடரும் அமீர்கான்: அடுத்த 1000 கோடி வசூல் படம்!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மகா வெற்றி பெற்று ரூ.1000 கோடி வசூலைக் குவித்த பாகுபலியைத் தொடர்ந்து, நடிகர் அமீர்கானின் `தங்கல்' ..


சென்னை: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மகா வெற்றி பெற்று ரூ.1000 கோடி வசூலைக் குவித்த பாகுபலியைத் தொடர்ந்து, நடிகர் அமீர்கானின் `தங்கல்' திரைப்படமும் 1000 கோடி வசூல் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளது.
பிரபல ஐயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ராமயா கிருஷ்ணன், அனுஷ்கா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் `பாகுபலி-2'. இந்திய சினிமாவில் இல்லாத அளவில் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ரூ.1250 கோடி வசூல் செய்துள்ளது.
உலக அளவில் வெளியான இந்திய சினிமாக்களிலேயே ரூ.1000 கோடி வசூலை வாரிக் குவித்த முதல் படம் என்ற பெருமையையும் `பாகுபலி-2' பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2'-ன் வசூல் ரூ.900 கோடியாகும்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியிருந்த `தங்கல்' படமும் ரூ.1000 கோடி என்ற வசூல் இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது.
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படம் சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், டப் செய்யப்பட்டு கடந்த வாரம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் வெளியாகிய ஒரே வாரத்தில் `தங்கல்' சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தெடர்ந்து இப்படத்தின் மொத்த வசூல் ரூ.1026 கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே ரூ.1000 கோடி வசூலை தாண்டிய இரண்டாவது இந்திய படமாக தங்கல்' பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...