கேன்ஸ் திரைப்பட விழாவையும் கலக்கப் போகும் 'பாகுபலி'!
உலகின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் வசூல் சாதனைப்படமான பாகுபலி திரையிடப்படுகிறது.


சென்னை: உலகின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் வசூல் சாதனைப்படமான பாகுபலி திரையிடப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. மிகவும் புகழ் பெற்ற இந்த திரைப்பட விழாவானது தற்பொழுது 70-ஆவது ஆண்டாக நடந்து வருகிறது.
இந்த விழாவில் உலகின் முக்கியமான திரைப்பட ஆளுமைகள் அநேகம் பேர் கலந்து கொள்வார்கள். இந்தியாவிலிருந்தும் நிறைய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வருட விழாவில் திரையிடலுக்காக 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றில் சமீபத்தில் வெளிவந்து இந்திய அளவில் வசூல் சாதனை நிகழ்த்திய ‘பாகுபலி-2’ படமானது திரையிடப்பட்டுள்ளது. நேற்று ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று ‘பாகுபலி-2’ படம் திரையிடப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...