இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' என்னும் புதிய படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். 

News image
Updated On :28 மே 2017, 1:13 pm

DIN

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' என்னும் புதிய படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். 

புதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. இந்த படத்தில் அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவரை வைத்து சமாபேத்தில் போட்டோஷுட் ஒன்றையும் அந்த படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளனர்.

அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்பபடத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Story image

அபய் தியோல் தொடர்பான காட்சிகள் ரைவில் ஹைதரபாத்தில்  படமாக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.