தெலுங்குத் திரையுலகில் அமோக வரவேற்பு: அனிருத் மகிழ்ச்சி!
பவன் கல்யாண் படத்துக்காக அனிருத் இசையமைத்த Baitikochi Chuste என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது...


தமிழில் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் வேலைக்காரன் என இரு படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார் அனிருத். புதுமுகங்கள் நடித்துள்ள ஆகோ என்கிற படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்குத் திரையுலகம் அனிருத்துக்குப் பெரிய பட வாய்ப்புகளை அளித்து அவரை அந்தப் பக்கம் இழுத்துள்ளது. திரிவிக்ரம் இயக்கும் பவன் கல்யாணின் 25-வது படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அதேபோல திரிவிக்ரமின் அடுத்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார். இதற்கு அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனிருத்தின் Bewajah என்கிற மியூசிகல் வீடியோ நவம்பர் 11 அன்று வெளியிடப்படுகிறது.
பவன் கல்யாண் படத்துக்காக அனிருத் இசையமைத்த Baitikochi Chuste என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடல் வெளியான சில மணிநேரங்களில் 1.5 மில்லியன் (15 லட்சம்) பார்வைகளை அடைந்தது. இதையடுத்து ட்வீட் செய்த அனிருத், 8 மணி நேரங்களில் 1 மில்லியன் பார்வைகள். தெலுங்குத் திரையுலம் எனக்கு அளிக்கும் அமோகமான வரவேற்பு இது எனத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...