இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மகனுக்காக வீட்டை உருமாற்றிய அஜித்!

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில்

News image
Updated On :16 அக்டோபர் 2017, 7:03 pm

DIN

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில் ஒரு வாடகை வீடு எடுத்து சில காலம் தங்கியிருந்தார். அதற்குக் காரணம் அவருடைய மகன் ஆத்விக்குக்காக சொந்த வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும்படியான சில மாற்றங்களைச் செய்வதற்காகத் தான்.

Story image

காதல் மனைவி ஷாலினிக்கு அன்பான அக்கறையான கணவராக, மனைவியின் பேட்மிண்டன் பயிற்சிகளை ஊக்குவிப்பவராக இருந்து வருகிறார் அன்புக் கணவர் அஜித். பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் இந்த தம்பதியரின் வாழ்க்கையை மேலும் அழகாக்கியது. அஜித் ஈஸிஆர் ரோட்டில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கியிருக்காமல், திருவான்மியூரில் வாடகை வீட்டுக்குத் தனது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.

Story image

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனது குட்டி இளவரசனுக்காக வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்ததால் தான் அஜித், வாடகை வீட்டுக்கு இடம் பெயர்ந்தார். ஈஸிஆரில் உள்ள வீட்டை தற்போது முற்றிலும் ரீமாடல் செய்து விட்டார்.

Story image

நவீன வகையில் உருவாகியுள்ள அவ்வீட்டின் கதவு முதல் சமையலறை வரை எல்லா கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும். மனைவி ஷாலினிக்குத் தனி பேட்மிண்டன் கோர்ட் வசதியும் மகளுக்கு பரத நாட்டியம் பிராக்டிஸ் செய்ய தனி இடமும் அமைத்துக் கொடுத்துள்ளார் அஜித்.

Story image

அன்பும் அக்கறையும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடிப்படை. அது சினிமா நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தான் பணி புரியும் துறையில் கடினமாக உழைப்பதுடன், சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவாக இருப்பது பாராட்டுக்குரியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.