ஹிந்தி பிக் பாஸ் அக்டோபர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது.
கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் இரவு 9 மணிக்குத் தொடங்கும்.
கடந்த ஏழு வருடங்களாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வருகிறார். இந்த வருடமும் இவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். வார இறுதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் அரங்கினுள் சென்று போட்டியாளர்களுடன் சில நாள்கள் தங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கான், இந்த வருடம் ஒருநாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரூ. 11 கோடி சம்பளம் பெறுகிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது சல்மான் கானிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த சல்மான் கான், ராஜ் நாயக்கை (நிகழ்ச்சியைத் தயாரிக்கும் எண்டமோல் நிறுவனத் தலைமை நிர்வாகி) இந்தச் சம்பளம் வழங்கச் சொல்லுங்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
இதுபற்றி ராஜ் நாயக் கூறும்போது, சல்மான் கான் போன்ற ஒரு நடிகர் குறைந்த சம்பளத்துக்குக் கிடைக்கமாட்டார் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



