சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து தயாராகவிருக்கும் புதிய தெலுங்குத் திரைப்படம், சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. உய்யாலவாடா ரெட்டி, பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து துரத்துவதற்காக நடத்தப்பட்ட முதல் புரட்சி எனக்கருதப்பட்ட சிப்பாய் கலகத்துக்கும் முன்பே ஆந்திராவில் மக்களிடையே சுதந்திர உணர்வை கொழுந்து விட்டு எரியச் செய்தவராகக் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் இத்திரைக் காவியத்தில் சிரஞ்சீவியுடன் நயன் தாரா, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப் உள்ளிட்டோருடன் விஜய் சேதுபதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடிக்கவிருப்பது ‘ரேனாட்டி சூரியடு’ எனும் காத்திரமான கதாபாத்திரம். கிட்டத்தட்ட சிப்பாய் கலகத்தின் மாவீரன் மங்கள் பாண்டே கதாபாத்திரத்துக்கு இணையானது. தமிழில் வெற்றிகரமான நடிகராக கருதப்படும் விஜய் சேதுபதி, இத்திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டிலும் முதல்முறையாகக் கால் பதிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டதுடன், படத்தில் பங்கேற்கவிருக்கும் படக்குழுவினரின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் இயக்குனர் சுரேந்தர்
ஒளிப்பதிவு ரவிவர்மன்
இசை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்
திரைக்கதை வசனம் பருச்சூரி சகோதரர்கள்
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



