‘ராயல் வெட்டிங்’கில் மணப்பெண் தோழியாகவிருக்கும் நம்மூர் உலக அழகி! 

இந்த வருட ஆரம்பத்திலேயே ப்ரியங்கா, ப்ரின்ஸ் ஹாரியின் ராயல் வெட்டிங்கில், மணமகள் மேஹன் மார்க்லேவின் மணப்பெண்தோழியாக கலந்து கொள்ளவிருக்கிறார் என்ற தகவல்
‘ராயல் வெட்டிங்’கில் மணப்பெண் தோழியாகவிருக்கும் நம்மூர் உலக அழகி! 
Published on
Updated on
1 min read

ப்ரியங்கா சோப்ராவை நாம் தான் இன்னமும் உலக அழகி என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றைய அவரது சர்வதேச அடையாளம் குவாண்டிகோ ஸ்டார். சுமார் 64 நாடுகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்க சீரியலின் நாயகி அவர். சர்வதேச அளவில் வெகுஜன மக்களிடையே செல்வாக்குள்ள இந்தியர்களில் ப்ரியங்காவும் ஒருவர். அவரது செல்வாக்கின், பிரபலத்தன்மையின் எல்லை எதுவரை என்றால் இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் அளவுக்கு பிரபலமான இந்தியர்களில் ஒருவராகி இருக்கிறார் ப்ரியங்கா. இத்தகவலை நேற்று வெளிவந்துள்ள அமெரிக்க வாரப்பத்திரிகையொன்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இளவரசர்களில் ஒருவரான ப்ரின்ஸ் ஹாரி, மேஹன் மார்க்லேயின் ராயல் வெட்டிங்கில் கலந்து கொள்ள இந்திய அழகியும் உலகப் புகழ் குவாண்டிகோ நடிகையுமான ப்ரியங்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உறுதியான செய்தி தான். திருமணத்தில் கலந்து கொள்ள ப்ரியங்கா ரெடி. ஆனால், பிரச்னை என்னவெனில், உலகப் பிரசித்தி பெறப்போகும் அந்த ராயல் வெட்டிங்கில் கலந்து கொள்ள எந்த உடையைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் தான் இன்னும் தீர்ந்தபாடில்லையாம். திருமணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதில் அணிந்து கொள்ளவிருக்கும் உடையத் தேர்வு செய்து முடிப்பது தான் இப்போதைக்கு ப்ரியங்காவின் மிகப்பெரிய டாஸ்க். இந்த வருட ஆரம்பத்திலேயே ப்ரியங்கா, ப்ரின்ஸ் ஹாரியின் ராயல் வெட்டிங்கில், மணமகள் மேஹன் மார்க்லேவின் மணப்பெண்தோழியாக கலந்து கொள்ளவிருக்கிறார் என்ற தகவல் அவ்வப்போது கசியவிடப்பட்டுக் கொண்டு தான் இருந்தன. ஆனால் அது உறுதிசெய்யப்படாத வதந்தியாகவே இதுநாள் வரை நிலவியது.

ப்ரியங்கா எப்படி மேஹன் மார்க்லேவின் தோழியானார்?

எனக்கு மேஹனை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தெரியும். அவரது அறிமுகம் கிடைத்ததில் எனக்கு சந்தோசமே. மேஹனை நான் அறிந்த நாள் முதல், ஒரு அரச குடும்பத்தின் வருங்கால மருமகளாக இந்த உலகம் மேஹனை எதிர்கொள்ளும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. இன்றைய உலகின் மிகச்சிறந்த சமூகப் போராளியாகத் திகழும் மேஹன் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கான இளவரசி என்பதை விட மக்களுக்கான இளவரசி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த உலகுக்கு மேஹன் மாதிரியான பெண்களே சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழத்தக்கவர்கள். என்றெல்லாம் டைம்ஸ் பத்திரிகையில் இங்கிலாந்தின் வருங்கால இளவரசியைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் ப்ரியங்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com