ஒரு சகாப்தம் நிறைவடைந்தது, தமிழச்சியாய் இருப்பதில் பெருமை: ஆண்ட்ரியா உருக்கம்
பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சலி செய்தியை பதிவிட்டுள்ளார்.


பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சலி செய்தியை பதிவிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் பதப்படுத்தப்பட்டு, இரவு 9 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். நள்ளிரவு ஒன்றரை மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும் பின்னர் சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டது.
அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாசாலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது:
திமுக தலைவர் கருணாநிதி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழக அரசியலில் ஒரு சகாப்தம் நிறைவடைந்துள்ளது. உங்கள் சாதனை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று இரங்கல் தெரிவித்ததோடு, தமிழச்சியாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்ற ஹாஷ்டேக் வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...