பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

16 மாடிக் கட்டடமாக மாறும் அபிராமி மெகா மால்! அடுக்குமாடிக் குடியிருப்பில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு முன்னுரிமை!

ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 17 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது...

News image
Updated On :29 டிசம்பர் 2018, 9:16 am

எழில்

சென்னையைச் சேர்ந்த அபிராமி மெகா மால் வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு, ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1976 முதல் இயங்கி வரும் அபிராமி திரையரங்கம் முதலில் இரு திரையரங்குகள் கொண்ட வளாகமாக இருந்தது. அதன்பிறகு 1982-ல் அன்னை அபிராமி, சக்தி அபிராமி என கூடுதலாக இரு திரையரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன. இதன்பிறகு 2002-ல் முற்றிலும் புதிய வடிவமாக மாறியது. அபுராமி மெகா மால் உருவானது. 7 ஸ்டார், ரோபோ பால அபிராமி, ஸ்ரீ அன்னை அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி என்கிற பெயர்களுடன் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் மாற்றப்பட்டன. 

இந்நிலையில் 1000 இருக்கைகள் கொண்ட திரையரங்குகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அபிராமி மெகா மால் பிப்ரவரி 1 முதல் இயங்காது. பொங்கல் படங்களுக்குப் பிறகு புதிய வெளியீடுகள் இத்திரையரங்கில் திரையிடப்படாது. முழு வளாகமும் புனரமைப்பு செய்யப்பட்டு - ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. முதல் 3 மாடிகள் (தரைத்தளம் + 2 மாடிகள்) திரையரங்குகள், ஷாப்பிங் மால் கொண்ட வணிக வளாகமும் அதற்கு மேல் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பும் கட்டப்படவுள்ளன. இக்கட்டடத்தில் சைவ உணவு உண்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களில் இந்தக் கட்டடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.