ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை: வாலிபர் கைது!

ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

News image
Updated On :1 பிப்ரவரி 2018, 12:20 pm

எழில்

ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சனுஷா, கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்துள்ளார். ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று, கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விரைவு ரயிலில் சனுஷா பயணம் செய்தார். தன்னுடைய பெர்த்தில் அவர் படுத்திருந்தபோது பக்கத்துக்கு பெர்த்தில் இருந்த நபர், சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளார். இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல்துறையிடம் சனுஷா புகார் அளித்தார்.

சனுஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டோ போஸ் என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைக் காவல்துறை கைது செய்தது.  

நேற்று, தொழிலதிபர் ஒருவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயல்வதாக நடிகை அமலா பால் சென்னை காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து அழகேசன் என்கிற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சனுஷாவுக்கும் அதேபோன்றதொரு பாலியல் தொந்தரவு ரயிலில் நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.