வாழ்க்கை அழகான புகைப்படத்தைத் தரும்போது....: நடிகை விஜயலட்சுமி


சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
ஃபெரோஸ், தூங்காநகரம், வல்லினம் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இயக்கிய கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை படம் கடந்த வருடம் வெளியானது.
விஜயலட்சுமி - ஃபெரோஸ் தம்பதியருக்கு நிலன் என்கிற ஒரு மகன் உண்டு.
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, வாழ்க்கை அருமையான புகைப்படத்தைத் தரும்போது அதை ட்விட்டரில் பகிரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பு தீபாவளியின்போது தன்னுடைய 5 மாத மகனின் புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...