ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வசூலைத் தவிர நடிகர்களின் திறமை பற்றி பேச ஒன்றுமில்லையா?: ரசிகர்களின் மோதல் குறித்து தயாரிப்பாளர்!

வசூல் குறித்து சண்டையிடும் ரசிகர்களுக்கு நடிகர்களின் நடிப்பு மற்றும் அவர்கள் நடித்த படம் குறித்து பேச ஒன்றுமில்லையா...

News image
Updated On :2 பிப்ரவரி 2018, 7:00 am

எழில்

வசூல் குறித்து சண்டையிடும் ரசிகர்களுக்கு நடிகர்களின் நடிப்பு மற்றும் அவர்கள் நடித்த படம் குறித்து பேச ஒன்றுமில்லையா என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கேள்வியெழுப்பியுள்ளார்.

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியதாவது:

வசூல் நிலவரத்தைக் கண்காணிப்பவர், திரைப்பட விமரிசகர், ஊடகவியலாளர் - போட்டியினால் இந்த எல்லா பொறுப்புகளும் ஒன்றாகிவிட்டன. பார்வையாளர்களுக்கு அவர்கள் தேவையில்லாத தகவல்களைத் தருகிறார்கள். இப்போது படத்தின் உள்ளடகத்தை விடவும் வசூல் குறித்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். படத்தின் உள்ளடக்கம், நடிகர்களின் திறமை குறித்தெல்லாம் ரசிகர்களுக்குப் பேச ஒன்றுமில்லையா? பயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

பொங்கல் சமயத்தில் வெளியான படங்கள் சரியான வசூலைப் பெறவில்லையென்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சமூகவலைத்தளங்களில் வசூல் குறித்த விவாதங்கள் உருவாகியுள்ளன. இதையடுத்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.