வாட் எ கைய்: கோலிக்கு அனுஷ்கா பாராட்டு மழை!
காதல் கணவர் விராட் கோலியின் சதத்தை இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளம் வழியாகக் கொண்டாடியுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா...


காதல் கணவர் விராட் கோலியின் சதத்தை இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளம் வழியாகக் கொண்டாடியுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டர்பன் நகரில் பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3, யுவேந்திர சாஹல் 2, புவனேஷ்வர், பும்ரா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து ஆடிய இந்தியா 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் கோலி-ரஹானே ஜோடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. கோலி-ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. ரஹானே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களில் வெளியேறினார். கோலியும் 119 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இது கோலியின் 33-வது ஒருநாள் சதம். இலக்கை விரட்டும்போது எடுத்த 20-வது சதம். வெளிநாடுகளில் அவருடைய 19-வது சதம். கேப்டனாக இருந்து எடுத்துள்ள 11-வது சதம். தென் ஆப்பிரிக்காவில் இது அவருடைய முதல் சதம். விராட் கோலி 9 நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ளார். இந்த ஒன்பதிலும் அவர் சதமெடுத்துள்ளார்.
இந்நிலையில் கோலியின் சதத்தையும் அவருடைய சாதனைகளையும் காதல் மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டகிராம் வழியாகக் கொண்டாடியுள்ளார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாட் எ கைய் என்று எழுதியும், ஆர்ட்டின் படங்களையும் வெளியிட்டும் கோலிக்கு இன்ஸ்டகிராம் வழியாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...