அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சொகுசு கார் வழக்கு: நடிகை அமலா பால் கைதாகி விடுதலை!

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கேரளக் காவல்துறையினரால் கைதாகி பிறகு விடுதலை செய்யப்பட்டார்...

News image
Updated On :29 ஜனவரி 2018, 10:02 am

எழில்

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கேரளக் காவல்துறையினரால் கைதாகி பிறகு விடுதலை செய்யப்பட்டார். 

கேரளத்தைச் சேர்ந்த அமலா பால், புதுச்சேரியைச் சேர்ந்தவர் போல போலியான முகவரியைக் காட்டி, சொகுசு கார் வாங்கியுள்ளார். கேரளத்தில் அந்த காரை வாங்கி பதிவு செய்தால் 20 சதவீதம் அளவுக்கு, அதாவது சுமார் 20 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும். ஆனால், புதுச்சேரியில் வரி குறைவு என்பதால், போலி முகவரி மூலம் காரை அங்கு பதிவு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டி கேரளக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்த காரை வாங்குவதற்காக அமலா பால் கேரளத்தில்தான் கார் கடன் பெற்றுள்ளார் என்றும் கூறியிருந்தனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் அமலா பால்.

நேற்று மாலை கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அமலா பாலை கேரளக் காவல்துறை கைது செய்து, பிறகு சொந்த ஜாமீனில் விடுதலை செய்தது. இதே வழக்கில் நடிகர்கள் சுரேஷ் கோபி, பஹத் ஃபாசில் ஆகியோரும் கைதாகி விடுதலையாகியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.