வசூல் மழை பொழியும் பத்மாவத்: இந்தியாவில் ரூ. 125 கோடியை அள்ளியது!

சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது...
வசூல் மழை பொழியும் பத்மாவத்: இந்தியாவில் ரூ. 125 கோடியை அள்ளியது!

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. 

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. குர்கான், ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, இருசக்கர வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. புதன்கிழமையன்று நடைபெற்ற பிரிவியூ காட்சிகள் உள்பட படம் வெளியான நாள் முதல் நேற்று வரை அந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 128 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த இரு நாள்களில் ரூ. 150 கோடி வசூலை அடைந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ. 250 கோடி வசூலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பத்மாவத் - முதல் 5 நாள்கள் வசூல் - (கிட்டத்தட்ட) ரூ. 128 கோடி

புதன்கிழமை (பிரிவியூ காட்சிகள்) - ரூ. 5 கோடி
வியாழன் - ரூ. 19 கோடி
வெள்ளி - ரூ. 32 கோடி
சனி - ரூ. 27 கோடி
ஞாயிறு - ரூ. 31 கோடி.
திங்கள் - (கிட்டத்தட்ட) ரூ. 14 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com