சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் ‘தமிழ்ப்படம்2’!: விளம்பரத்திலும் தொடரும் பகடி!
ஒரு படம் வெளியான அடுத்தநாளே, வெற்றிநடை போடுகிறது என்று போஸ்டர் அடித்து விளம்பரம் செய்வதுதான்...


சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப்படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகத்திலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் 2 படத்துக்கு இசை - என். கண்ணன். இந்தப் படம் நேற்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் மட்டுமல்லாமல் படத்தை விளம்பரம் செய்வதிலும் பகடி செய்துவருகிறார் இயக்குநர் சி.எஸ். அமுதன். ஒரு படம் வெளியான அடுத்தநாளே, வெற்றிநடை போடுகிறது என்று போஸ்டர் அடித்து விளம்பரம் செய்வதுதான் தமிழ்த் திரையுலகின் வழக்கம். ஆனால் தமிழ்ப்படமும் அப்படிச் செய்தால் என்ன சுவாரசியம் இருக்கும்?
சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ஆவ்ரேஜ் வெற்றியுடன் சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படம் 2 என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன! இதன்மூலம் இதிலும் தன்னுடைய வழக்கமான பகடியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன். எனினும் நேற்று தமிழகம் முழுக்க அமோக வசூலை அடைந்துள்ளது தமிழ்ப்படம் 2. இதன் வசூல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...