புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காலா படத்துக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

News image
Updated On :6 ஜூன் 2018, 5:45 am

எழில்

ரஜினி நடித்துள்ள காலா படத்துக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலாவுக்குத் தடைகோரி கே.எஸ். ராஜசேகரன் என்பவர் தொடர்ந்த மனு ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரஜினியின் காலா படத்துக்குத் தடை கோரி ராஜசேகரன், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். படத்தின் தலைப்பு, கதை தன்னுடையது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.எஸ்.ராஜசேகரன், காலா படத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவில், 'கரிகாலன்' என்ற படத்துக்கான தலைப்பை நான் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை முறையாகப் பதிவு செய்து புதுப்பித்து வந்தேன். திடீரென இந்தத் தலைப்பை நடிகர் ரஜினிகாந்த் படத்துக்கு 'காலா' என்ற கரிகாலன் என பெயர் வைத்து தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, 'நான் எனது படத்தின் தலைப்பை புதுப்பிக்காததால் அந்த தலைப்பை வேறு ஒருவருக்கு மாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். ஒருவேளை அப்படியிருந்தால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும். மேலும் 'காலா என்ற கரிகாலன்' திரைப்படத்துக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், இந்த வழக்குத் தொடர்பாக மனுதாரர் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே 'காலா' என்ற கரிகாலன் திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், 'காலா' திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், படத்தின் தலைப்பை பதிவு செய்துவிட்டு, அதனைப் புதுப்பிக்காமல் இருந்தால் அந்த தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''காலா திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கை வரும் ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக பட்டியலிட முடியாது. இந்த மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வரும் ஜூன் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.