புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காலா படத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை திரைக்கு வரவுள்ள காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி...

News image
Updated On :6 ஜூன் 2018, 11:47 am

எழில்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை திரைக்கு வரவுள்ள காலா' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் போரூரைச் சேர்ந்த ரமேஷ் குமார் மனுத்தாக்கல் செய்தார். 

காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரின் வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து, நாடார் சமுதாயத்துக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. 

இந்நிலையில் திரவியம் நாடாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் வழக்கு தொடரவில்லை, ஒரு படத்தைப் பார்க்காமல் எப்படி அதில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது எனக் கூறமுடியும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், காலா படத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார்கள்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளை வெளியாகவுள்ளது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.