பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ட்வீட்டுக்குக் கிளம்பிய எதிர்ப்புகள்: நடிகர் விவேக் விளக்கம்!

கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று நடிகர் விவேக் வழங்கிய அறிவுரை சர்ச்சையை உருவாக்கியுள்ளது...

News image
Updated On :2 மே 2018, 8:32 am

எழில்

கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று நடிகர் விவேக் வழங்கிய அறிவுரை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நடிகர் விவேக், ட்விட்டரில் இன்று தெரிவித்ததாவது:

அன்புள்ள மாணவர்களே, குழந்தைகளே! கோடை வெயிலாக இருந்தாலும் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும். விளையாடி முடித்தபிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். மாணவிகள், தங்கள் அம்மாக்களுக்குச் சமையலறையில் உதவுங்கள். கூடவே சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்கள், தங்களுடைய அப்பாவின் அலுவலகத்துக்குச் சென்று, அவர் குடும்பத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.

விவேக்கின் இந்த ட்வீட்டுக்கு உடனடியாக எதிர்ப்புகள் கிளம்பின. பெண்கள் என்றால் சமையலறைக்கும் ஆண்கள் என்றால் பணியிடங்களுக்கும்தான் செல்லவேண்டுமா? ஏன், மாணவர்கள் சமையலறைக்கும் மாணவிகள் பணியிடங்களுக்கும் செல்லக்கூடாதா என்கிற கேள்வியை எழுப்பிப் பலரும் விவேக்கின் ட்வீட்டுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.

இதையடுத்து தன்னுடைய ட்வீட்டுக்கு விளக்கம் அளித்து விவேக் கூறியதாவது: தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்து பெற்றோரும் ஆமோதிப்பர். என்னைப் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.