இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் இயக்குநர் ஆக முடியாது! இப்படி சொன்னவர் யார்?

பிக் பி என்று பாலிவுட் உலகில் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் தன் 49 வருட

News image
Updated On :18 மே 2018, 12:10 pm

ராக்கி

பிக் பி என்று பாலிவுட் உலகில் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் தன் 49 வருட திரை வாழ்க்கையில் தனக்கு ஒரே ஒரு வீக்னஸ் இருந்ததாக தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன் மற்றும் ரிஷிகபூர் நடிப்பில் அண்மையில் வெளியான `102 நாட் அவுட்’ எனும் படம் திரை ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. பிரபல ஹாலிவுட் திரை விமரிசகரான ரோஜர் எபர்ட் இந்தப் படத்துக்கு 3 க்கு 2.5 ஸ்டார் கொடுத்து படத்தைப் பாராட்டியுள்ளார்.

102 நாட் அவுட் படத்துக்காக ரிஷிகபூருடன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளார் அமிதாப் பச்சன். இதில் 102 வயதுடைய தந்தையாக அமிதாப்பும்,  75 வயது மகனாக ரிஷிகபூரும் சிறப்பாக நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நிகழும் பாசப் போராடங்களை மிக அழகாக இத்திரைப்படத்தில் சித்தரித்துள்ளனர்.

Story image

இத்திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் மும்பையில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் உமேஷ் சுக்லா, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவர் அமிதாப் பச்சனிடம் திரைப்படங்கள் இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலாக அமிதாப், ‘எனக்கு டைரக்‌ஷன் தெரியாது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் இயக்குநர் ஆக முடியாது. ஒவ்வொரு முறையும் இயக்குநர்கள் வைக்கும் கேமரா ஆங்கிள் பற்றி என் மனதில் பல்வேறு கேள்விகள் எழும்’ என்று வெளிப்படையாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.