பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை ஹிந்திப் படமாக எடுக்கவுள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித்.
ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த உலிஹட்டில் பிறந்தவர் பிர்ஸா முண்டா. பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய முண்டா, 1890களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, 25 வயதில் சிறையில் இறந்தார். அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித். ரஜினி நடித்த காலா படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது.
நமா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் மே மாதம் தொடங்கவுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கவுள்ளதாக அறம் படம் இயக்குநர் கோபி நயினாரும் சமீபத்தில் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


