/

நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் எனத் தெரியும்: ரித்விகா வெற்றி குறித்து ஐஸ்வர்யா தத்தா

என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. இதற்கு எப்படி கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:57 pm

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது.

ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். பிக் பாஸ் 2 போட்டியை நடிகை ரித்விகா வென்றுள்ளார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் கோப்பையும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் மூன்றாம் இடத்தை நடிகை விஜயலட்சுமியும் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் ட்விட்டரில் ரித்விகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. அவர் அதில் கூறியதாவது:

வாழ்த்துகள் தோழி. நீங்கள் இந்த வெற்றிக்கு உரித்தானவர். நீங்கள்தான் வெல்வீர்கள் என எனக்குத் தெரியும். வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம் ரித்விகா என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மற்றொரு ட்வீட்டில், என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. இதற்கு எப்படி கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. பிக் பாஸ் பயணம் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கமல் ஹாசன் சார்... ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. தமிழ் மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.