பி.டி. உஷா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை விருப்பம்!
நான் பாட்னாவைச் சேர்ந்தவள் என்பதால் இந்த அணியுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளேன்...


ப்ரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியின் தூதராக பாலிவுட் நடிகை நீது சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பமா என்கிற கேள்வி நடிகை நீது சந்திராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
ஆமாம். நானே ஒரு விளையாட்டு வீராங்கனைதான். பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம். அவருடைய வாழ்க்கையைத் திரையில் கொண்டுவரப் பிரியப்படுகிறேன். அதுபோன்ற ஒரு படம் இந்தியப் பெண்கள் பலருக்கு ஊக்கமாக அமையும்.
கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியின் தூதராகச் செயல்படும் நான், ஒரு நடிகையாக அல்லாமல் விளையாட்டு வீராங்கனையாகச் செயல்படப் போகிறேன். நான் பாட்னாவைச் சேர்ந்தவள் என்பதால் இந்த அணியுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார். டேக்வாண்டோ விளையாட்டில் சாம்பியனாக இருந்துள்ள நீது சந்திரா, கூடைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...