கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திரைப்படத்தில் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்திய விவகாரம்: தில்லி நபரிடம் மன்னிப்பு கேட்ட சன்னி லியோன்!

சன்னி லியோனிடம் பேசமுடியுமா என்று முதலில் கேட்டுவிட்டு பிறகு அவரிடம் மோசமாகப் பேசுகிறார்களாம்...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2019, 12:23 pm

எழில்

திரைப்படங்களில் தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்தும்போது உபயோகத்தில் இல்லாத எண்களையே பயன்படுத்துவார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஹிந்திப் படமொன்றில், பயன்பாட்டில் உள்ள ஒரு தொலைப்பேசி எண் குறிப்பிடப்பட்டதால் தில்லையைச் சேர்ந்த ஒருவர் பல தொல்லைகளை அனுபவித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த அர்ஜூன் பாட்டியாலா என்கிற ஹிந்திப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் பிரபல நடிகை சன்னி லியோன். அப்படத்தின் ஒரு காட்சியில் தன்னுடைய தொலைப்பேசி எண் என ஓர் எண்ணை அவர் வழங்குவார். அது தில்லியைச் சேர்ந்த புனீத் அகர்வால் என்பவருடைய எண். இதனால் அந்த நபருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

27 வயது புனீத் அகர்வாலுக்கு தினமும் 100, 150 தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றனவாம். சன்னி லியோனிடம் பேசமுடியுமா என்று முதலில் கேட்டுவிட்டு பிறகு அவரிடம் மோசமாகப் பேசுகிறார்களாம். முதலில் எதனால் இப்படித் தனக்கு போன் செய்கிறார்கள் என்று குழம்பியவர், பிறகுதான் தன்னுடைய தொலைப்பேசி எண் அர்ஜூன் பாட்டியாலா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். உடனே, பலர் மோசமாகப் பேசி தன்னைத் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து நடிகை சன்னி லியோனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: மன்னிக்கவும். உங்களுக்கு இப்படி நடக்கவேண்டும் என்றெண்ணி அப்படிச் செய்யவில்லை. எனினும் சுவாரசியமான மனிதர்களிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கும் என்று கிண்டலாகப் பதில் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.