சாஹோவுக்காகத் தள்ளிவைக்கப்பட்ட படங்கள்: பிரபாஸ் நன்றி!
சாஹோ படத்தின் வெளியீட்டை முன்வைத்து வேறு தேதிக்கு மாற்றிக்கொண்ட படங்களுக்கும் அதன் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்...


பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 150 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடித்துள்ள படம் என்பதால் சாஹோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள். ஆகஸ்ட் 30 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். ஆகஸ்ட் 30 அன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சாஹோ படம் ஆகஸ்ட் 30 அன்று வெளிவருவதாக உள்ளதால் காப்பான் பட வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 20 அன்று காப்பான் படம் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாஹோ படத்தின் வெளியீட்டை முன்வைத்து வேறு தேதிக்கு மாற்றிக்கொண்ட படங்களுக்கும் அதன் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரபாஸ். தன்னுடைய சமூகவலைத்தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
சாஹோ படம் ஆகஸ்ட் 30 அன்று வெளிவர தங்களுடைய படங்களைத் தள்ளிவைத்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என்னுடைய பெரிய நன்றி. இதற்காக சாஹோ படக்குழு நன்றியுடன் இருக்கும். உங்களுடைய படங்களின் வெற்றிகளுக்கு எங்களுடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
சாஹோ படத்துக்காகத் தங்களுடைய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்த நான்கு படக்குழுவினருக்கு சாஹோ படத்தைத் தயாரிக்கும் யூ.வி. கிரியேஷன்ஸ் நிறுவனமும் நன்றியைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...