கணவர் எடுத்த கவர்ச்சிப் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா!

கணவர் எடுத்த கவர்ச்சிப் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா!

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து இருக்கும் அழகிய தருணங்களை பகிர்ந்து வருகிறார். 
Published on

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்குப் பதிப்பான ஏ மாய சேஸாவே படப்பிடிப்பு முதல் காதலித்து வந்தனர்.

8 வருட காதலுக்குப் பின்னர் ஒருவழியாக 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பிறகு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்தாலும், மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடிக்கவும் தவறவில்லை.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து இருக்கும் அழகிய தருணங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், தற்போது சமந்தா பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.

ஸ்பெயின் சென்றுள்ள சமந்தா, நாக சைதன்யா ஜோடி அங்கு விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அங்கு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தான் சமந்தா பகிர்ந்தார்.

அதில், தனது கணவர் நாக சைதன்யா தான் இந்த அழகிய புகைப்படத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com