/

தனுஷுடன் புதிய படத்தில் கைகோர்த்த நட்டி

பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுடன் தனுஷ் இணைகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

News image
Updated On :22 டிசம்பர் 2019, 12:30 pm

பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுடன் தனுஷ் இணைகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது நட்டி என்று பிரபலமாக அறியப்படும் ஒளிப்பதிவாளர்-நடிகர் நடராஜன் சுப்பிரமணியம் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

Story image

தனுஷ் 41 (டி 41) என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தில், மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஜூன் மற்றும் பைனல்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர். மேலும் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவிருக்கிறார். 

Story image

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜின் இன்னும் பெயரிடப்படாத (டி 40) படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரையில் உள்ளார்.  இது தவிர, ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் பட்டாஸ், ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் ஒரு படம், தனது சகோதரர் செல்வராகவனுடன் ஒரு படம், மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் என கைநிறைய படங்கள் வைத்துள்ளார் தனுஷ். அடுத்த ஆண்டு. 2020 தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.